Published : 26 Jan 2020 04:27 PM
Last Updated : 26 Jan 2020 04:27 PM

பத்ம விருது பெற்றவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம விருதுகள் பெற்றவர்களை வாழ்த்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வேணு சீனிவாசன் சிறந்த தொழில் மற்றும் வர்த்தக செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவித்த செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

அதே போன்று, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் சிறந்த சமூக சேவையினை அங்கீகரித்து அவருக்கும் மத்திய அரசு உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவித்துள்ளது என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

கலைத்துறையில் சிறந்து விளங்கும் கர்நாடக இசைப் பாடகர்கள் திருமதி லலிதா மற்றும் திருமதி சரோஜா சிதம்பரம் ஆகியோருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, சென்னை ஆகிய பெரும் நகரங்களின் வரலாற்று, சமூக மற்றும் கலாச்சார அடையாளங்களின் ஓவியங்களை சிறப்புற தீட்டும்
மனோகர் தேவதாஸ் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணனின் சமூக சேவையினை பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது நாதஸ்வர இசையால் அனைவரின் உள்ளங்களை கவர்ந்து வரும் திருமதி காலீ ஷாபி மெகபூப் மற்றும் திரு. ஷேக் மெகபூப் சுபானி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் பிரதீப் தலப்பில், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம பூஷன் விருதினை பெறும் வேணு சீனிவாசன் மற்றும்
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்; பத்மஸ்ரீ விருதினை பெறும் லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ், எஸ். ராமகிருஷ்ணன், காலீ ஷாபி மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி மற்றும் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் மேன்மேலும் பல விருதுகளை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’ எனக் கூறிள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, பிரபல சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணனை சந்தி்தது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x