Last Updated : 26 Jan, 2020 01:17 PM

 

Published : 26 Jan 2020 01:17 PM
Last Updated : 26 Jan 2020 01:17 PM

புதுச்சேரியில் குடியரசு தின விழா: ஆளுநர் கிரண்பேடி தேசியக் கொடியை ஏற்றினார்

புதுச்சேரியில் குடியரசு தின விழா: படங்கள்; எம்.சாம்ராஜ்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்

நாட்டின் 71-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்துகொண்டு தேசியை கொடியை ஏற்றி வைத்து திறந்த ஜீப்பில் சென்றபடி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நடைபெற்ற காவல்துறை, பள்ளி கல்லூரி மாணவர்களின் அணிவகுப்புகள், பல்வேறு துறைகளின் அலங்கார வாகன அணிவகுப்புகள், பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை கிரண்பேடி பார்வையிட்டார். மேலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்களை வழங்கி ஆளுநர் கிரண்பேடி பாராட்டினார்.

குடியரசு தின விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் குடியரசு தினம் நடைபெறும் உப்பளம் மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து. அதேபோல் உப்பளம் சாலை, சட்டமன்ற வளாகம், கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x