

வேங்கடமங்கலம் குப்பை கிடங்கால் கடும் துர்நாற்றம் வீசுவதாக செங்கல்பட்டு கோட் டாட்சியரிடம் கிராம மக்கள் முறையிட்டனர்.
தாம்பரம், பல்லாவரம் மற்றும் செம்பாக்கம் நகராட்சி குப்பைகள் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வேங்கட மங்கலம் கிராமத்தில் கொட்டப் பட்டு வருகிறது. இங்கு 50 ஏக்கர் பரப்பளவில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துதற்கான வேலை கள் நடந்து வருகின்றன.
இதற்கான பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், தினமும் சுமார் 300 டன் குப்பையில் இருந்து சோதனை முறையில் மின்சாரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதன் காரண மாக, வேங்கடமங்கலம் மற் றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். மின்சார ஆலையை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்திலும் ஈடு பட்டு வருகின்றனர்.
இதையடுத்து கிராம மக்களிடம் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி, செங்கல்பட்டு கோட்டாட்டசி யருக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் உத்தரவிட்டார்.
இதன்பேரில், கோட்டாட்சியர் பன்னீர் செல்வம் தலைமையில் செங்கல்பட்டு கோட்ட அலு வலகத்தில் நேற்று சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில், வேங்கடமங்கலம் கிராம மக்கள் கலந்து கொண்டு குப்பை கிடங்கினால் கடும் துர்நாற்றம் மற்றும் சத்தம் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பேசிய கோட்டாட்சியர், குப்பை கிடங்கு அதிகாரிகளிடம் விசாரித்து ஒருசில நாட்களில் உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பின்னர் அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: குப்பை கிடங்கில் மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தின் விதிமுறைப்படி செயற் பொறியாளரைக் கொண்டு 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, அவர் அளிக் கும் அறிக்கையின்படி நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.