

சீர்காழி ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளரை கட்சியை விட்டு நீக்கியதைக் கண்டித்து, அதிமுகவினர் போயஸ் கார்ட னுக்கு நடைபயணமாகச் சென்று அமைச்சர் ஜெயபால் மீது புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
சீர்காழி ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்த வர் நாங்கூர் நாடி ராஜேந்திரன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தாக செய்தி வெளியானது. இதையடுத்து, நாடி ராஜேந்திரன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.
அதில், கடந்த மாதம் நாகையில் நடைபெற்ற அதிமுக உட்கட்சித் தேர்தலில் மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ததால், தமிழக மீன்வளத் துறை அமைச்சரும், நாகை மாவட்டச் செயலாளருமான ஜெய பால் அவரை கட்சியிலிருந்து நீக்கியதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாடி ராஜேந்தி ரனின் சொந்த ஊரான நாங்கூரில் நேற்றுமுன்தினம் இரவு அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றியக் குழு உறுப்பினர் செல்லப்பாங்கி, ஊராட்சி செய லாளர் நாகராஜ் உட்பட 11 கிளை களின் செயலாளர்களும், சுமார் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
எந்தத் தவறும் செய்யாத நாடி ராஜேந்திரனை கட்சியை விட்டு நீக்கிய தமிழக மீன்வளத் துறை அமைச்சரை வன்மையாகக் கண்டிப்பது என்று தீர்மானம் இயற்றிய அவர்கள், மீண்டும் நாடி ராஜேந்திரனை கட்சியில் இணைத் துக் கொள்ள வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24-ம் சீர்காழியிலிருந்து நடைபயணமாக சென்னை போயஸ் கார்ட னுக்குச் சென்று, முதல்வர் ஜெய லலிதாவிடம் மனு அளிப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.