Published : 24 Jan 2020 08:50 AM
Last Updated : 24 Jan 2020 08:50 AM

சிஐடியு 16-வது தேசிய மாநாடு சென்னையில் தொடக்கம்: குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்

சிஐடியு 16-வது அகில இந்திய மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற சிஐடியு அகில இந்தியத் தலைவர் கே.ஹேமலதா, மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென் உள்ளிட்டோர். படம்: க.பரத்

சென்னை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தொழிற்சங்கமான, இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 16-வதுஅகில இந்திய மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தொடங்கிய இம்மாநாடு வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று காலை 10 மணிக்கு மாநாட்டுத் திடலில் கொடியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வெண்மணி தியாகிகள், பொன்மலை தியாகிகள், சின்னி யம்பாளையம் தியாகிகள், புதுச் சேரி தியாகிகள் மற்றும் வி.பி.சிந்தன், ஜே.ஹேமச்சந்திரன், லீலாவதி நினைவு ஜோதிகளை தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.

பின்னர், சிஐடியு அகில இந்திய தலைவர் கே.ஹேமலதா தலைமையில் மாநாட்டுத் தொடக்கவிழா பொது மாநாடு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினரும், மாநாட்டின்வரவேற்புக் குழு தலைவருமானஅ.சவுந்தரராஜன் வரவேற்புரையாற்றினார்.

ஐஎன்டியுசி தலைவர் ஆர்.பி.கே.முருகேசன், ஏஐடியூசி பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், திமுகவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.சண்முகம் உள்ளிட் டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இம் மாநாட்டில் சிஐடியு தலைவர் கே.ஹேமலதா பேசியதாவது:

மிக முக்கியமான காலகட்டத் தில் சிஐடியு மாநாடு நடை பெறுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. படிப்பை முடித்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. மேலும், மத்திய பாஜகஅரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அழிந்து வருகின்றன. நகரங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் மக்களுக்கு வேலை இல்லை. நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்க வேண்டிய மோடி அரசு, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி அழித்து வருகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து, குடி யுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சென் முன்மொழிந்து பேசும் போது, ‘‘குடியுரிமைச் சட்டம் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறான மதச்சார்பற்றத் தன்மைக்கு எதிராக உள்ளது. இந்தச் சட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது’’ என்றார்.

இம் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x