

அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் அறிவுத் திருவிழா - விநாடி வினா நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுகிறது.
இத்திருவிழாவில் சென்னை மாவட்ட அளவில் நடைபெறவுள்ள விநாடி – வினா போட்டியில் 9 முதல்12-ம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ – மாணவியர் பங்கேற்கலாம். ஒரு குழுவில் அதிகபட்சம் இரு மாணவர்கள் இருக்கலாம்.
இந்த விநாடி - வினா போட்டி இன்று (ஜன. 24, வெள்ளிக்கிழமை) சென்னை மேடவாக்கம் ஜல்லடியான்பேட்டை பெரும்பாக்கம் மெயின் ரோட்டிலுள்ள செயின்ட் ஜான்ஸ் பப்ளிக் ஸ்கூலில் மதியம் 1 மணி அளவில் தொடங்குகிறது.
இப்போட்டியில் ஒரு பள்ளியிலிருந்து எத்தனை குழுக்கள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். போட்டி நடைபெறும் இடத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் பள்ளி அடையாள அட்டையுடன் பள்ளிச் சீருடைஅணிந்து வர வேண்டும். மேலும்,விவரங்களை அறிய 9791605238 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.