ஜன.24 அனைத்துக் கட்சிக் கூட்டம் : திமுக திடீர் அழைப்பு

ஜன.24 அனைத்துக் கட்சிக் கூட்டம் : திமுக திடீர் அழைப்பு
Updated on
1 min read

ஜனவரி 24 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, கொமக, முஸ்லீம் லீக் , மமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அரசியல் சார்பற்ற திக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR) தேசிய குடியுரிமை பதிவேடு(NRC) திட்டங்களை வேகமாக அமல்படுத்தும் நோக்கில் நகர்வுகள் தொடங்கியுள்ளன. நாடெங்கும் இதற்கு எதிரான போராட்டங்கள் நடந்துவருகின்றன.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், சில பாஜக மாநிலங்களிலும் இத்திட்டங்களை அமல்படுத்தமாட்டோம் என முடிவெடுத்துள்ளன. கேரளா இத்திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் திமுக அதன் தோழமைக்கட்சிகள் அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு திட்டமிட திமுக அனைத்துக்கட்சிக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முக நூல் பதிவு:

” மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டம் மற்றும் #NPR #NRC கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என அதிமுக அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

#CAA #NRC #NPR க்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஜன- 24ம் தேதி திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in