துக்ளக்கை வைத்து மட்டும் சவால் விடாமல் பெரியார் தொடர்பான புத்தகங்களையும் படியுங்கள்: ரஜினிக்கு திருமாவளவன் அறிவுரை

துக்ளக்கை வைத்து மட்டும் சவால் விடாமல் பெரியார் தொடர்பான புத்தகங்களையும் படியுங்கள்: ரஜினிக்கு திருமாவளவன் அறிவுரை
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் இதழை வைத்து மட்டும் சவால் விடாமல், பெரியார் தொடர்பான அவரின் போராட்டங்கள் தொடர்பான புத்தகங்களையும் படிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அளித்த பேட்டி:

பெரியாரை விமர்சிப்பது, கொச்சைப்படுத்துவது 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது .மாமலையிடம் மோதி குப்புற விழுந்திருக்கிறார்கள். பெரியார் கொள்கை பகைவர்களை எதிர்த்தார் கடுமையாக போராடினார். மூடநம்பிக்கை எதிர்த்தவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. பெரியாரை யாரும் வீழ்த்த முடியவில்லை.

தேர்தல் அரசியலில் அண்ணாவும் கலைஞரும் மென்மேலும் பெரியாரின் கொள்கைகளை வலு சேர்த்தார்கள். சங்பரிவார் கருத்துகளுக்கு ரஜினிகாந்த அடிப்பணிந்து செயல்படுகிறார். ரஜினி பகடை காயாக மாறி விடுவாரோ, இல்லை அதுதான் அடையாளமாக இருந்தாலும் அது அரசியல் நிலைப்படாக இருந்தால் அந்த கனவு பலிக்காது.

பெரியார் வாழ்க என ரஜினிகாந்த் விரைவில் தெரிவிப்பார். பெரியார் இல்லாமல் தமிழகத்தில் அரசியலில் ஈடுபடமுடியாது என்பதை அவர் விரைவில் உணர்ந்து செயல்படுவார். பொது தேர்வுகளை பொறுத்தவரை 5-ம் வகுப்பிற்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல.

தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும். தமிழில் வழிப்பாடு.நடத்தவும் வேண்டும் . பிப்-22-ம் தேதி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக விசிக திருச்சியில் தேசம் காப்போம் என்ற பேரணியை நடத்த உள்ளது”.
இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in