Published : 21 Jan 2020 04:52 PM
Last Updated : 21 Jan 2020 04:52 PM

மதுரை - உசிலம்பட்டி ரயில் சேவை தொடங்குவது எப்போது?: சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு கோட்ட மேலாளர் பதில்

மதுரை

மதுரை- உசிலம்பட்டி இடையே பிப்ரவரி மாத இறுதிக்குள் ரயில் சேவை தொடங்கும் என, சு. வெங்கடேசன் எம்பியின் கோரிக்கைக்கு கோட்ட மேலாளர் லெனனில் பதிலளித்தார்.

மதுரை மக்களவை உறுப்பினர்சு வெங்கடேசன்நேற்று மதுரை ரயில்வே கோட்டமேலாளர் வி.ஆர்.லெனினை இன்று சந்தித்தார். மதுரை ரயில்வே துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினார்.

அப்போது, பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோட்ட மேலாளரிடம் அவர் வலியுறுத்தினார்.

மதுரை- போடி ரயில் சேவைக்கான முதற்கட்டமாக மதுரை உசிலம்பட்டி இடையி லான ரயில் சேவையை உடனடி அமல்படுத்த வேண்டும். தல்லாகுளத்திலுள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தின் செயல்பாட்டை நிறுத்தும் சூழல் உள்ளது எனத் தகவல் வெளியாகிறது. மதுரையின் வடக்கு பகுதி மக்கள் வசதிக்கென அந்த முன்பதிவு மையம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

மதுரை கூடல் நகர் பகுதி மக்களுக்காக அந்தியோதயா விரைவு ரயில் கூடல்நகர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது பயன்பாட்டிலுள்ள திண்டுக்கல் - காரைக்கால் ரயில் சேவை மதுரை மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக மதுரையிலிருந்து இயக்கவேண்டும். இதற்கு துறை சார்ந்த முன்மொழிவை அரசுக்கு அனுப்பவேண்டும்.

வாரம் இரண்டு முறை சேலம் வழியாக இயங்கும் மதுரை -சென்னை, துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி, விழுப்புரம் வழியாக தினசரி இயக்க வேண்டும். இதன்மூலம் மதுரை மக்கள் கூடுதலாக பயன்பெற வாய்ப்புள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு ரயில் என்ற தன்மையில் இயக்கப்படும் ராமேஸ்வரம் -கோயம்புத்தூர் ரயிலை தொடர்ந்து மக்களின் பயன்பாட்டிற்கான சேவையாக மாற்றுவதற்கான முயற்சிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இக்கோரிக்கை தொடர்பாக பதிலளித்த கோட்ட மேலாளர் லெனின் ‘‘ ஜனவரி 23, 24 தேதிகளில் சோதனை ஓட்டத்துக்கு பின், பிப்ரவரிஇறுதிக்குள் மதுரை- உசிலம்பட்டி இடையே ரயில் இயக்கப்படும்.

இதைத்தொடர்ந்து அடுத்த நான்கு மாதத்திற்குள் மதுரை – போடி ரயில் சேவை தொடங்கப்படும்.அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோரிப்பாளையம் பகுதியில் இயங்கும் முன்பதிவு மையத்தை தொடர்ந்து இயக்கப்படும். ராமேசுவரம்- கோவை சிறப்பு ரயிலை மக்கள் சேவைக்காக தொடர் ந்து இயக்க முயற்சிக்கப்படும்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x