

திமுக ஆதரவாளரான கவிஞர் மனுஷ்யபுத்திரன் புதன்கிழமை அதிகாரபூர்வமாக அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது:
"திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து கலைஞர் விருதிற்கு தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்தேன்.
மேலும், திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகாரபூர்வமாக இணையும் படிவத்தில் கையெழுத்திட்டேன். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனிருந்தார்.
திராவிட இயக்க லட்சியங்களையும் சமூக நீதிக் கோட்பாடுகளையும் முன்னெடுக்கும் எனது பயணத்தில் இந்த நாளை எனது வாழ்வில் முக்கியமானதாகக் கருதுகிறேன்."
இவ்வாறு மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டுள்ளார்.