திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டியில் ஷீரடி சாய்பாபா கோயில் குடமுழுக்கு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டியில் ஷீரடி சாய்பாபா கோயில் குடமுழுக்கு
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டியில் பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டுள்ள ஷீரடி சாய்பாபா கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி கிராமத்தில் சாய் கற்பக விருக்ஷா அறக்கட்டளை சார்பில் ‘தென் ஷீரடி’ என்று அழைக்கப்படும் விதமாக சாய்பாபா கோயில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில்,குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 17-ம் தேதி யாகசாலையில் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து 18-ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் தொடங்கப்பட்டு, முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது. 19-ம் தேதி காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

குடமுழுக்கு தினமான நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, ஹோமம், மகா சங்கல்பம் ஆகியவை நடைபெற்றன. காலை 9 மணிக்கு பூர்ணாஹூதி நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. 9.15 மணிக்கு யாகசாலையிலிருந்து மங்கள வாத்தியங்களுடன் புனித நீர் கலசங்கள் புறப்பட்டு, 9.30 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் ஒரே நேரத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.

தொடர்ந்து விநாயகர், ஷீரடி சாய்பாபா, தத்தாத்ரேயர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நடைபெற்று மங்கள ஆரத்தி காட்டப்பட்டது. இந்த விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in