காயமடைந்த டாஸ்மாக் ஊழியருக்கு அரசு ரூ.50,000 நிதியுதவி

காயமடைந்த டாஸ்மாக் ஊழியருக்கு அரசு ரூ.50,000 நிதியுதவி
Updated on
1 min read

சென்னை தி.நகர் டாஸ்மாக் கடைக்கு சில மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், காயமடைந்த ஊழியர் பழனிவேல் சிகிச்சைக்காக ரூ.50,000 நிதியுதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டம், கிண்டி வட்டம், தியாகராய நகர், தெற்கு போக் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் 12.8.2015 அன்று, சில மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், பணியில் இருந்த திரு ரங்கசாமி என்பவரின் மகன் பழனிவேல் என்பவர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

இந்த சம்பவத்தில் தீக்காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் திரு பழனிவேல் அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க சென்னை மாவட்ட நிருவாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் டாஸ்மாக் ஊழியர் பழனிவேல் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். திரு பழனிவேல் அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50,000/- ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்"

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in