இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி: பழநியில் ஒரே நேரத்தில் மக்கள் திரண்டதால் பரிதாபம்

இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி: பழநியில் ஒரே நேரத்தில் மக்கள் திரண்டதால் பரிதாபம்
Updated on
1 min read

பழநியில் இலவச மிக்சி, கிரைண் டர் பெறுவதற்காக திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பழநி நகராட்சி அடிவாரம் 30-வது வார்டு திலகர் வீதியை சேர்ந்தவர் சங்கர். லாரி ஓட்டுநர். இவரது மனைவி கிருஷ்ணவேணி (42). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் பழநி நகராட்சியில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்குவதற்காக 4,811 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. டோக்கன்கள் பெற்றவர்களில் 2,500 பேருக்கு முதற்கட்டமாக நேற்று காலை பழநி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனால் நேற்று காலை 5 மணி முதலே பள்ளி மைதானத்தில் மிக்சி, கிரைண் டர் பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் வரத் தொடங்கினர்.

நேற்று பழநியில் வழக்கத்துக்கு மாறாக கடும் வெயில் அடித்தது. அதனால், நேற்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத் திருந்த ஆண்கள், பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். வேணுகோபால் எம்எல்ஏ, 11 மணிக்கு வந்து இலவச மிக்சி கிரைண்டர்களை வழங்க ஆரம்பித்தார்.

அப்போது வரிசையில் காத்தி ருந்த மக்கள் மிக்சி, கிரைண்டர் வாங்க ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளி முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய கிருஷ்ணவேணி மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை அப்பகுதி மக்கள் பழநி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக் காமல் கிருஷ்ணவேனி இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவ மனை வளாகத்தில் திரண்டனர். அதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இதையடுத்து மருத்துவ மனை நிர்வாகம் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ண வேணியின் சடலத்தை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

இதுகுறித்து எம்எல்ஏ வேணு கோபால் தரப்பில் விசாரித்த போது, ‘‘10 மணிக்கு விழா தொடங்குவதாக இருந்தது. 10.30 மணிக்கு வந்துவிட்டோம். அந்த பெண்ணுக்கு பக்கவாதம் இருந்ததால் அவரால் நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடி யாமல் இறந்துள்ளார். இது எம்எல்ஏவுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது, அந்த பெண்ணின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை ஏற்பாடு செய்ய எம்எல்ஏ ஆட்சி யர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி யுள்ளார்’’ என்றார்.

மிக்சி, கிரைண்டர் வாங்க ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளி முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய பெண் மூச்சு திணறி இறந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in