Published : 20 Jan 2020 08:12 AM
Last Updated : 20 Jan 2020 08:12 AM

தமிழகம் முழுவதும் இன்று முதல் 27-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் (ஆர்டிஓ) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று முதல் 27-ம் தேதி வரையில் (ஞாயிறு தவிர) நடத்தப்படுகின்றன.

ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் நாடுமுழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். எனவே, பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தேசிய சாலை பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டும் அனைத்து மாநிலங்களிலும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் வரும் 20-ம்தேதி முதல் 27-ம் தேதி வரை(ஞாயிறு தவிர்த்து) ஒரு வாரம்சாலை பாதுகாப்பு வாரமாகதமிழகத்தில் கடைபிடிக்கப்படவுள்ளது.

ஓவியப் போட்டிகள்

அதன்படி, தமிழகத்தில் உள்ள110 ஆர்டிஓ-கள் உட்பட மொத்தமுள்ள 146 போக்குவரத்து அலுவலகங்களிலும் சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

போக்குவரத்துத் துறை, போக்குவரத்து போலீஸ், கல்வித்துறை,மாவட்ட அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டபல்வேறு துறையினர் இணைந்துசாலை பாதுகாப்பு தொடர்பானபேரணிகள், நடை பயணம், கருத்தரங்குகள், கண்காட்சிகள், விநாடி வினா, கட்டுரை, பேச்சு,ஓவியப் போட்டிகள், ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம்கள், போக்குவரத்து விதிமுறைகள், சாலை விபத்துகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x