Last Updated : 19 Jan, 2020 01:17 PM

 

Published : 19 Jan 2020 01:17 PM
Last Updated : 19 Jan 2020 01:17 PM

தஞ்சாவூர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

தஞ்சை கரந்தை பூக்குளம் ஜைன முதலி தெருவில் ஆதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபடும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வர். இக்கோயிலில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இக்கோயில் வழக்கம்போல் நேற்று மாலை பூஜைகள் முடிந்த பின்னர் இரவு கோவிலின் கேட் அடைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை வழக்கம்போல் கோயிலுக்கு வந்தவர்கள் கிரில் கேட் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி உடனடியாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் நேற்று நள்ளிரவில் கோயிலுக்கு வந்த மர்மநபர்கள் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்த கேட்டின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் உள்ளே காமிரா இருப்பதை கண்ட மர்மநபர்கள் 2 காமிராக்களின் மீது ஸ்பிரே அடித்து நுரையால் மறைத்துள்ளனர். ஒரு காமிராவை கவனிக்காததும் தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த 3 அடி உயரமுள்ள ஆதீஸ்வரர் ஐம்பொன் சிலை மற்றும் வெண்கலத்தால் ஆன சரஸ்வதி, ஜோலமணி, பஞ்சநதீஸ்வரர், நதீஸ்வரர், மகாவீரர் உள்ளிட்ட வெண்கல எட்டு சிலைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x