

மதுரை விமான நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறுகிறது.
வளையன்குளம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் Dr. சிவகுமார் , தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்க சாமி மற்றும் சுகாதார பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியினில் ஈடுபட்டு வருகின்றனர்,
விமானங்களில் பயணம் செய்த பயணிகள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது .இதில் நியூசிலாந்து நாட்டிலிருந்து வந்த பிரியதர்ஷிணி என்ற பயணியின் குழந்தை பிரணகிருஷ்ணன் (வயது 4) சொட்டு மருந்து வழங்கப்பட்டது.