Last Updated : 19 Jan, 2020 07:51 AM

 

Published : 19 Jan 2020 07:51 AM
Last Updated : 19 Jan 2020 07:51 AM

எஸ்.ஐ.  வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய‌ அல்உம்மா தீவிரவாதி பெங்களூருவில் கைது- மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூரு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய அல் உம்மா தீவிரவாதி மெகபூப் பாஷா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மத்திய‌ குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கு தொடர்பாக கடந்த 7-ம் தேதி தமிழக குற்றப்பிரிவு போலீஸார் பெங்களூரு குரப்பன பாளையாவில் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தமிழக மற்றும் கர்நாடக குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணை யில் தாக்குதல் சதி திட்டம் தொடர் பான தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ் நகர், கோலார் ஆகிய இடங்களில் தலைமறைவாக இருந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

உடுப்பியில் கைது

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ள களியக் காவிளை சோதனைச் சாவடி யில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) சுட்டுக் கொல்லப் பட்டார். அங்கிருந்து தப்பி யோடிய தவுபீக் (27), அப்துல் ஷமீம் (29) ஆகிய இருவரையும் கர்நாடக குற்றப்பிரிவு போலீ ஸார் கடந்த 14-ம் தேதி உடுப்பி ரயில் நிலையம் அருகே கைது செய்தனர்.

இதனிடையே, 17 தீவிரவாதிகள் தொடர்பான ரகசிய தகவல் ஒன்றை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு பிரிவு) அதிகாரிகள் கடந்த வாரம் அளித்தனர். அதன் அடிப்படையில் சுடுகொண்டபாளையா போலீஸார் தானாக முன்வந்து, தீவிரவாத தடுப்பு சட்ட பிரிவின் கீழ் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஆயுதங்கள் பறிமுதல்

இந்நிலையில் சுத்த‌கொண்ட பாளையாவை சேர்ந்த மெகபூப் பாஷா (45) என்பவரை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான படை தேடி வந்தது. ஜெயநகரில் தங்கியிருந்த மெகபூப் பாஷாவை மத்திய குற்றப்பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்பு படை போலீஸார் இணைந்து நேற்று அதிகாலையில் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த குரப்பன பாளையா பகுதியை சேர்ந்த‌ முகமது மன்சூர்கான் (32), சையத் சலீம் (38) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, சுடுவதற் கான வரை பட காகிதம் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

சுத்த‌கொண்டபாளை யாவை சேர்ந்த அல் உம்மா தீவிரவாதி மெகபூப் பாஷா, பாகிஸ் தானை சேர்ந்த ஜிகாதி அமைப்பு களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அதன் மூலம் தென்னிந்தியாவில் அல்-உம்மா தீவிரவாத அமைப்பை பலப்படுத்தும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு ரகசியமாக‌ பயிற்சி அளிப்பது, தங்களது அமைப்புக்கு எதிரானவர்களை தாக்குவது போன்ற சதி முயற்சிக‌ளில் மெகபூப் பாஷா ஈடுபட்டு உள்ளார்.

இதன் காரணமாக சென்னை, கன்னியாகுமரி, கேரளா, சாம் ராஜ்நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சென்னை அம்பத்தூர் இந்து முன் னணி பிரமுகர் கொலை உள் ளிட்ட வழக்குகளில் தொடர்பு உடையவர்களுக்கு மெகபூப் பாஷா அடைக்கலம் கொடுத் துள்ளார். கன்னியாகுமரி மாவட் டம் களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்டுள்ளார்.

சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள குண்டல்பேட்டை மலைக் கிராமத்தில் தங்க வைத்து சில இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி யும் கொடுத்துள்ளார். கடந்த 7-ம் தேதி தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்ட இம்ரான் கானுக்கு துப்பாக்கியும் வழங்கி உள்ளார்.

இதேபோல வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய இஜாஸ் பாஷாவுக்கும் துப்பாக்கி வாங்கி கொடுத்துள்ளார். டெல்லியில் கைதான காஜா மொய்தீன், சையத் அலி நவாஸ் உள்ளிட்டோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங் களும், இவர்களிடம் கைப்பற்றப் பட்ட ஆயுதங்களும் ஒரே மாதிரி யாக உள்ளன. அவர்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக் கிறதா என்பது விசாரணைக்குப் பிறகு தெரியும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா?

வில்சன் கொலை வழக்கு விசாரணையில், அல்உம்மா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உடையவர்கள் சிக்கி இருப்பது திடீர் திருப்பத்தை ஏற் படுத்தியுள்ளது. இதனை கொலை வழக்காக மட்டும் விசா ரிக்காமல், வேறு ஏதேனும் தாக்குதல் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ள தீவிர வாதிகளுக்கு, டெல்லியில் கைதான காஜா மொய்தீன், சையத் அலி நவாஸ் ஆகிய ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்பு உள் ளதா எனவும் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x