ரயில் பயணிகளிடம் ஒரே நாளில் ரூ.9 லட்சம் அபராதம்

ரயில் பயணிகளிடம் ஒரே நாளில் ரூ.9 லட்சம் அபராதம்
Updated on
1 min read

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 2,329 பயணிகளிடம் இருந்து ரூ.8.89 லட்சம் ஒரே நாளில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போரின் எண்ணிக்கையை குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஜனவரி 11 முதல் 20-ம் தேதி வரையில் சிறப்பு சோதனைகளை நடத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, முக்கிய ரயில் நிலையங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 14-ம் தேதி நடந்த சோதனையில் மட்டும் உரிய டிக்கெட் இன்றி ரயில் பயணம் மேற்கொண்ட 2,329 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ரூ.8 லட்சத்து 89 ஆயிரத்து 230 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதுவரை டிக்கெட் இன்றி பயணம் செய்து பிடிபட்டோரின் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும். இதற்கு முன்பு கடந்த 13-ம் தேதி 2,281 பேரும், கடந்த டிசம்பர் 23-ம் தேதி 2,215 பேரும் பிடிபட்டிருந்ததே அதிகமாக இருந்தது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘பண்டிகை நாட்களில் வரும் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பயணிகள் சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து வருகின்றனர். அப்படி பயணம் செய்பவர்களை பிடித்து, அவர்களிடமிருந்து அபராதம் வசூலித்து வருகி றோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in