

தமிழகத்தில் அனுமதியின்றி உருவாக்கப்பட்ட 7 லட்சத்து 51 ஆயிரம் மனைகள் மற்றும்21 ஆயிரத்து 988 மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தியதன் மூலம் வீட்டுவசதித் துறைக்கு ரூ.757.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை பதிவு செய்யக்கூடாது என்று கடந்த 2016-ல் பதிவுத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம்அறிவிக்கப்பட்டது.
இதற்கு 2018-ம் ஆண்டு நவ.3-ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப்பின் விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்கள் அடிப்படையில் புதிய கட்டணத்தை வீட்டுவசதித் துறை நிர்ணயித்தது. இதன்படி, 2018 நவ.4-ம் தேதி முதல் 2019 மே 3-ம் தேதி வரை 6 மாதகாலகட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு, மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தால் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.110, நகராட்சி பகுதிக்கு ரூ.66, பேரூராட்சி மற்றும்ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்ரூ.33 கட்டணம் என்றும், 2019 மே-4-ம் தேதிக்குப்பின், நவ. 3-ம் தேதி வரை அடுத்த 6 மாதங்களுக்குள் விண்ணப்பிப்பவர்களுக்கு, மாநகராட்சி பகுதியாக இருந்தால் ரூ.125-ம், நகராட்சியாகஇருந்தால் ரூ.75-ம், பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியமாக இருந்தால் ரூ.37.50-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.
புதிய விதியின்கீழ், ஒரு மனைப்பிரிவு மேம்பாட்டாளர், விற்பனையாகாத மனைகளை வைத்திருந்தால், விற்கப்படாத ஒவ்வொரு மனைக்கும் அவர்உரிமையாளராகவே கருதப்படுவார் என்றும் கூறப்பட்டது.
இதன்படி, தற்போது வரைஅங்கீகரிக்கப்படாத மனைப்பிரி வுகள் தொடர்ந்து உரிய கட்டணம் வசூலிக்கப்பட்டு வரன்முறைப்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து வீட்டுவசதித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மனைகளின் உரிமையாளர்கள் தங்கள் மனைப்பிரிவுக்கும் உரிய கட்டணத்தை செலுத்தி வரன்முறைப்படுத்தும் திட்டம் தற்போது அமலில் உள்ளது. அதன் கீழ் தற்போது பலரும்விண்ணப்பித்து வருகின்றனர். தற்போது வரை 21 ஆயிரத்து 988 மனைப்பிரிவுகள், 7 லட்சத்து 51 ஆயிரம் மனைகள் வரன் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ.757 கோடியே 55 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது’’ என்றார்.