

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் விளைச்சல் அமோகமாக இருப்பதோடு அறுவடைப் பணி களும் தொடங்கி உள்ளதால் பொங்கல் பண்டிகை கொண்டாட் டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி யுடன் உள்ளனர்.
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை ஓரளவுக்கு கைகொடுத்ததால் விவசாயிகள் தரிசு நிலங்களை உழுது நேரடி விதைப்பு மூலமும், நாற்று விடுதல் மூலமும் என புதுக்கோட்டை மாவட்டத்தில் 1.70 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
கனமழை பெய்து நெற்பயிர்கள் பெரும்பாலும் தண் ணீரில் மூழ்கியும் பயிர்கள் பாதிக் கப்படவில்லை. எனினும், பூச்சி, நோய் தாக்குதலால் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டன. எனினும், கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடும்போது நிகழாண்டு பெரும் அழிவை விவசாயிகள் சந்திக்கவில்லை.
மேலும், பொங்கல் பண்டிகை நேரத்தில் தற்போது நெல் விளைச் சல் அமோகமாக இருப்பதாலும், நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி உள்ளதாலும் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். மேலும், அறுவடை செய்யப் படும் நெல்லை இடைத்தரகர் களிடம் விற்பனை செய்து விவசாயி கள் ஏமாறாமல் இருக்க தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கூறியதாவது: மாவட்டத்தில் இம்மாதத்தின் தொடக்கத்தில் முதல் கட்டமாக 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், அறந்தாங்கி வட் டத்தில் சுப்பிரமணியபுரம், அரசர் குளம்(கீழ்பாதி), நாகுடி, கண் டிச்சங்காடு, திருவப்பாடி, கொடி வயல், மங்களநாடு, துரையரச புரம், ஆலங்குடி வட்டத்தில் வல்லத்திராகோட்டை, வாராப்பூர், அரசடிப்பட்டி (நால்ரோடு), எல்.என்.புரம், கே.ராசியமங்களம், மணமேல்குடி வட்டத்தில் சிங் கவனம், இடையாத்திமங்களம், ஆவுடையார்கோவில் வட்டத்தில் நவக்குடி, பெருமருதூர், விளா னூர், கறம்பக்குடி வட்டத்தில் ராங்கியன்விடுதி, திருமயம் வட்டத்தில் கணிணிபுதுவயல் மற்றும் புதுக்கோட்டை வட்டத்தில் புத்தாம்பூர் ஆகிய கிராமங்களில் ஜன.20-ம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக் கப்படும். தேவைக்கு ஏற்ப இதன் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றார்.