Published : 14 Jan 2020 16:26 pm

Updated : 14 Jan 2020 16:26 pm

 

Published : 14 Jan 2020 04:26 PM
Last Updated : 14 Jan 2020 04:26 PM

'ஜெ., உங்களுக்கு பாட்டிமுறை, எம்.ஜி.ஆர்., தாத்தாமுறை': மாணவர்கள் மத்தியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

minister-dindigul-seenivasan-speech

திண்டுக்கல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு பாட்டி முறை, எம்.ஜி.ஆர்., உங்களுக்கு தாத்தா முறை, என அம்மா விளையாட்டு திட்டம் தொடக்கவிழாவில் மாணவர்களிடையே வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ., காலனியில் அம்மா இளைஞர் விளையாட்டுத்திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு முன்னிலை வகித்தார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள், சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி பேசியதாவது: அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் தொடங்கிவைக்கப்படுகிறது.

கிராமப்புற இளைஞர்கள், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் இது. நீங்கள் ஜெயலலிதாவை பார்த்திருப்பீர்கள். அவர்கள் உங்களுக்கு பாட்டி முறை. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களுக்கு தாத்தா முறை. நல்லபெயரை வாங்கவேண்டும் பிள்ளைகளே என அவர் பாடியுள்ளார். இதை பின்பற்றி நீங்கள் நல்லபெயரை வாங்கவேண்டும்.

அரசு விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், என்றார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உட்பட பலர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமாமேரி நன்றி கூறினார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஜெயலலிதாஎம்.ஜி.ஆர்.திண்டுக்கல் சீனிவாசன்இளைஞர் விளையாட்டுப் போட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author