

“வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் ஆதரவு கிடைக்காவிட்டால், கள் இயக்கம் கலைக்கப்படும்” என தமிழ்நாடு கள் இயக்க ஒருங் கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரி வித்தார்.
இதுகுறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஈரோடு பேருந்து நிலையத்தில் வரும் 22-ம் தேதி, மறைந்த காந்திய வாதி சசிபெருமாளுக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்படும். கள் இறக்கு வது தொடர்பாக இதுவரை பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் பயன் இல்லை.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜன் ஆகியோர் ஆதரவளிப்பதாக கூறி பின்னர் மறுத்து வருகின்றனர்.
வரும் 2016-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கள் இறக்கும் போராட்டமே இறுதிப் போராட்ட மாக இருக்கும். இதில் வெற்றி கிடைக்காவிட்டால், வரும் சட்டப் பேரவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். அதற்கும் மக்கள் ஆதரவு கிடைக்காவிட்டால் கள் இயக்கம் கலைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.