

சென்னையில் காணும் பொங்கல் கொண் டாட்ட கூட்ட நெரிசலில் காணாமல்போனால் எளிதில் மீட்க வசதியாக, குழந்தைகளின் கையில் கட்ட 10 ஆயிரம் அடையாள அட்டைகள் தயாராக உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காணும் பொங்கல் வரும் 17-ம் தேதி கொண் டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக் கள் உற்சாகமாக காணும் பொங்கல் கொண் டாடுவதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எடுத்து வருகிறார்.
அதன்படி, மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை, காந்திசிலை அருகே தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. உழைப்பாளர் சிலைமுதல் கலங்கரை விளக்கம் வரை சர்வீஸ் சாலை நுழைவுவாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு அவசர உதவிக்காக ஆம்புலன்ஸில் மருத்துவக் குழுவினரும், மீட்புப் பணிக்காக தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்படுகின்றனர். மெரினா மணல் பரப்பில் 13 தற்காலிக உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதில் தலா 3 போலீஸார் பைனாகுலர் மூலம்கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். டிரோன் கேமராக்கள் உதவி யுடனும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பாதுகாப்பு கருதி, மெரினா, பெசன்ட் நகர் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் காணாமல்போகும் சிறுவர்கள், குழந்தைகளை பத்திரமாக மீட்க அவர்கள் கையில் பிரத்யேக அடையாள அட்டை கட்டப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியதாவது:
கடற்கரை உள்ளிட்ட பொழுது போக்கு மையங்களில் கூட்ட நெரிசலில் காணாமல்போகும் குழந்தைகளை உடனடியாக மீட்கும் வகையில் குழந்தை களின் கையில் சென்னை பெருநகர காவல் மூலம் பிரத்யேக அடை யாள அட்டை கட்டப்பட உள்ளது.
குழந்தைகளுடன் வருபவர்கள், நுழையும் இடத்திலேயே நிறுத்தப்பட்டு அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், கைபேசி எண் எழுதப்பட்டு, குழந்தை களின் கையில் கட்டப்படும். இதற்காக 10,000 அடையாள அட்டைகள் தயாராக உள்ளன.
மக்கள் அதிகம் கூடும் கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி வளாகம், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங் கள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் காணும் பொங்கல் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.