

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம் பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமானவரித் துறையினர் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பிறகு இவ்வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி, வேறு நீதிபதியிடம் இவ் வழக்கைப் பட்டியலிடும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத் தார். அதுபோல, வருமான வரித் துறையினர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம் பரம் ஏற்கெனவே தொடர்ந்திருந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக் கறிஞர்கள் எம்.ஷீலா, என்.பாஸ் கரன் ஆகியோர் “இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டிருப்பதை மனுதாரர் தெரி விக்கவில்லை அத்துடன், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி யாக உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு நியமிக்கப் பட்டுள்ளார். மனுதாரர் எம்.பி. என்ப தால் நீதிபதி ஆதிகேசவலுதான் இவ்வழக்கை விசாரிக்க முடியும்" என்று தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இவ்வழக்கை தலைமை நீதிபதி முன்பு பட்டி யலிட பரிந்துரைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.