

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாண வர்கள் மற்றும் சில அமைப்பினர் பூரண மதுவிலக்கு கோரி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது காவல்துறையினர் அவர்களை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ் நேற்று முறையிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறும்போது, “அந்த சம்பவம் குறித்து பத்திரிகையில் நானும் படித்தேன். மாணவர்களும், மற்றவர்களும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்கு அவர்களுக்கு அனுமதியும் இல்லை. எனவே, இந்த சம் பவத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. மனு தாக்கல் செய்யுங்கள். அதுகுறித்து பின்னர் விசாரிக்கப்படும்” என்றார்.