நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன் காவல் நிலையத்தில் கையெழுத்து

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன் காவல் நிலையத்தில் கையெழுத்து
Updated on
1 min read

பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த வழக்கில் கைது செய்யபட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நெல்லை கண்ணன் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டார்.

முன்னதாக, மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடந்த 29-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

கடந்த 1-ம் தேதி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 10-ம் தேதி நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in