

விழுப்புரம் மாவட்டம் உளுந் தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. அதிக வீடுகள் சூழ்ந்துள்ள பகுதியில் அமைந்துள்ள இந்தக் கடையை மூட வேண்டுமென வலியுறுத்தி பாமக மகளிரணியினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பாமக மகளிரணி மாநில துணைச் செயலாளர் தனலட்சுமி, மாவட்ட செயலாளர் அறிவுக்கரசி ஆகியோர் தலைமை யில் ஊர்வலமாக வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ் மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். டாஸ்மாக் கடையை நோக்கிச் சென்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் போராட்டக் காரர்களுக்கும், போலீ ஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாமக மகளிரணியினர் உளுந் தூர்பேட்டை திருவெண்ணை நல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி டெம்போவின் கண்ணாடியை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடித்து உடைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து வருவாய்த் துறை யினரை அழைத்து வந்து போராட்டக்காரர்களிடம் போலீ ஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் மதுபான கடையை அகற்றுவது குறித்து ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.