

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் 25 காங்கி ரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறி வித்திருந்தார். அதன்படி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இளங்கோவன் தலைமை யில் நேற்று காலை 10 மணிக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது இளங் கோவன் பேசியதாவது:
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நாடாளுமன்றத் தில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.பி.க்கள் மீது இடைநீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை கள் எடுக்கப்படவில்லை. ஜன நாயக வழியில் எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் அரசு அனுமதித்தது. ஆனால், பாஜக அரசு எவ்வித நியாயமான காரணமும் இல்லா மல் 25 எம்.பி.க்களை இடைநீக் கம் செய்துள்ளது. இது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந் தியச் செயலாளர் சு.திருநாவுக்கர சர் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆருண், மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்டத் தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு புரசைவாக் கத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப் பட்டனர்.