

தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடார மாக தமிழகம் மாறிவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியலூரில் பாஜக மாவட்டத் தலைவர் அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது: கன்னி யாகுமரி மாவட்டத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளால் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட் டது குறித்து சட்டப்பேரவையில் யாரும் விவாதிக்கவில்லை. இதுதொடர்பாக அதிமுக, திமுக கட்சிகள் கண்டனம்கூட தெரி விக்கவில்லை.
தீவிரவாதிகளுடன் கூட்டணி
சிறுபான்மையினர் வாக்குக் காக கட்சிகள் அரசியல் செய்கின்றன. திமுக கூட்டணி கட்சிகளோடு முஸ்லிம் தீவிரவாதி களும் கூட்டணி வைத்திருக் கிறார்கள். இதற்கு திமுக விளக்கம் அளிக்க வேண்டும்
தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் இதைக் கூறிவருகிறேன். தற்போது கேரளா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.