

கன்னியாகுமரி மாவட்டம் களியக் காவிளையில் எஸ்ஐ வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி களில் ஒருவர் கேரள மாநிலம் தென்மலையில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
களியக்காவிளை சந்தை பகுதி யில் இஞ்சிவிளை செல்லும் அணுகு சாலையில் உள்ள சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ வில்சன் துப்பாக்கி யால் சுட்டும், கத்தியால் குத்தப் பட்டும் கொலை செய்யப் பட்டார்.
இந்த கொலை விவகாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் திரு விதாங்கோட்டையைச் சேர்ந்த அப்துல் சமீம்(32), நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் (28) ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக தமிழக மற்றும் கேரள காவல்துறை அறி வித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அவரது தலை மையில் 10 தனிப்படையினர் மற்றும் கேரள காவல் துறையின் 3 தனிப்படையினர் குற்றவாளிகளை யும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் கியூ பிரிவு மற்றும் தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு போலீஸாரும் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
எஸ்பி ஸ்ரீநாத் கூறும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் தவுபிக், அப்துல் சமீமுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களது நண் பர்கள் என உறுதி செய்யப் பட்டவர்களிடம் தொடர்ந்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தேடுதல் பணி மேற்கொள்ளப்படுகிறது. இரு வரையும் கைது செய்த பின்னரே எஸ்ஐ கொலையில் மேலும் எத்தனை பேருக்கு தொடர்புள்ளது என்ற விவரம் தெரியவரும்’’ என்றார்.
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு?
டெல்லியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக 3 பேர் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரான செய்யது அலி நவாஸ் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடியைச் சேர்ந்தவர். அவருடன் அப்துல் சமீம் தொடர்பில் இருந்துள்ளார்.
மேலும், பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகளாக அப்துல் சமீம், தவுபிக் இரு வரும் செயல்பட்டு வந்துள்ள னரா என்ற சந்தேகமும் போலீ ஸாருக்கு எழுந்துள்ளது. தமிழ கத்தின் முக்கிய பகுதிகளில் பெரிய அளவில் சதித்திட்டத்தை செயல்படுத்த அவர்கள் திட்ட மிட்டிருந்தனரா எனவும் போலீ ஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 பேரிடம் விசாரணை
இந்நிலையில் கேரள மாநிலம் தென்மலையில் 4 பேரை அம்மாநில போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதில் எஸ்ஐ கொலையில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒரு வரும் சிக்கியதாக தகவல் வெளி யாகியுள்ளது. அவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.