

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் நேற்று 3வது நாளாக புறப்பட்டு சென்றதால், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இன்று மேலும் அதிகரிக் கும் என்பதால் 1,300 சிறப்பு பேருந்து களை இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் களுக்கு சென்று, வர வசதியாக தமிழகம் முழுவதும் 30,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னையிலிருந்து 16,075 பேருந்துகளும், பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 14,045 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கடந்த 3 நாட்களாக சென்னையில் இருந்தும், பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு மட்டுமல்லாமல், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பேருந்து நிலை யங்களில் இருந்தும் வெளியூர் பேருந்துகள் நேற்று முதல் இயக்கப் பட்டன.
இதேபோல், பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லும் வகையில் 15-க் கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன் படி, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப் படுகின்றன.
4 லட்சம் பேர் பயணம்
இது தொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறிய தாவது:
பொங்கலையொட்டி சொந்த ஊருக்கு மக்கள் செல்ல வசதியாக சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தினமும் வழக்கமாக இயக்கப்படும் 2,000-க்கும் மேற்பட்ட அரசு பேருந்து களுடன் போதிய அளவில் சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப் படுகின்றன.
சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறோம். 3 நாளில் இது வரையில் சுமார் 4 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள் ளனர். பெரும்பாலான மக்கள் இன்று பயணம் செய்வார்கள் என்பதால், சென்னையில் இருந்து பல்வேறு இடங் களுக்கு மொத்தம் 1,300 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு மட்டுமல்லாமல், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்தும் வெளியூர் பேருந்துகள் நேற்று முதல் இயக்கப் பட்டன