நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டண முறை 15-ம் தேதிமுதல் கட்டாயம்: தலா ஒரு பாதையில் மட்டுமே பணம் செலுத்தி செல்ல அனுமதி

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டண முறை 15-ம் தேதிமுதல் கட்டாயம்: தலா ஒரு பாதையில் மட்டுமே பணம் செலுத்தி செல்ல அனுமதி

Published on

நாடுமுழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் கட்டண முறை வரும் 15-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது. இருப் பினும், ஒவ்வொரு சுங்கச்சாவடி யிலும் தலா ஒரு பாதையில் மட்டும் பணம் செலுத்தி பய ணம் செய்ய அனுமதி அளிக்கப் படும்.

சுங்கச்சாவடிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதைக் குறைக்கவும், வாகனங்கள் திருட்டு, சட்டவிரோத பொருள் கடத்தல் போன்ற சம்பவங்களைத் தடுக்கவும் பாஸ்டேக் (FASTag - மின்னணு கட்டணம்) முறையை மத்திய போக்குவரத்து அமைச்ச கம் கொண்டு வந்துள்ளது. இந்த கட்டண முறையை கட்டாயமாக்கு வதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தீவிரம் காட்டி வருகிறது.

இருப்பினும், பரனூர் உள்ளிட்ட சில சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அட்டையை கட்டாயமாக்கி கெடு பிடி செய்வதால், நீண்ட தூரத் துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதேபோல், பாஸ்டேக் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்ப தாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

வாகன ஓட்டிகள் புகார்

சில சுங்கச்சாவடிகளில் பாஸ் டேக் அட்டைகள் இருப்பு இல்லை. கட்டணத் தொகை பிடித்தம் தொடர்பான விபரங்களுக்கான எஸ்எம்எஸ் தாமதமாக வருகிறது. சில நேரங்களில் எஸ்எம்எஸ் வருவதே இல்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, பாஸ்டேக் கட் டண முறை, வரும் 15-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தேசிய நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நாடுமுழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ் டேக் (மின்னணு கட்டணம் வசூல்) முறையை படிப்படியாக கட்டாயமாக்கி வருகிறோம். தற் போதுள்ள நிலவரப்படி, மொத்த சுங்கச்சாவடி கட்டண வசூலில் 45 சதவீதம் பாஸ்டேக் முறையில் வரத் தொடங்கியுள்ளது.

10 விநாடிகளில் கடக்கலாம்

பாஸ்டேக் அட்டை தொடர் பாக சில இடங்களில் எழுந் துள்ள தொழில்நுட்ப புகார் களை உடனுக்குடன் சரி செய்து வருகிறோம். பாஸ்டேக் அட் டையைப் பயன்படுத்தும்போது 10 விநாடிகளில் சுங்கச்சாவ டியைக் கடந்து செல்லலாம்.

வாகன ஓட்டிகள், வாகன உரி மையாளர்களின் கோரிக்கையை ஏற்று, 15 நாட்களுக்கு கால அவ காசம் அளிக்கப்பட்டது. இதற் கிடையே, வரும் 15-ம் தேதி முதல் பாஸ்டேக் முறையை கட்டாய மாக்கவுள்ளோம்.

இருப்பினும், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் தலா ஒரு பாதையில் மட்டும் பணம் செலுத்தி பயன்படுத்தும் முறையை அனுமதிக்கவுள்ளோம். மற்ற பாதைகளில் பாஸ்டேக் பெற்ற வாகனங்கள் மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

இந்த பாதையில் பணம் கொடுத்து பயணம் செய்தால் சுங்கக் கட்டணம் 2 மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படும். இதில், ஒரு மடங்கு அபராத கட்டணமாக இருக்கும்” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in