

சேவை மனப்பான்மையை மக்களுக்கு வளர்க்க வேண்டும் என சங்கரா மருத்துவ குழும பவள விழா நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச் சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
பல்லாவரம் அடுத்த பம்மலில் சங்கரா மருத்துவ குழுமம் நடத்தும், பம்மல் பி.பி.ஜெயின் மருத்துவமனையின், பவள விழாவும்,
சங்கரா கண் மருத்துவமனையின் வெள்ளி விழாவும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை
யில் நேற்று நடைபெற்றது.
இதில், சங்கரா மருத்துவ குழுமத்தின் செயலர் விஸ்வநாதன், எம்.ஜி.ஆர். பல்கலை. துணைவேந்தர் சுதா சேஷய்யன், காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கரா குழும பொருளாளர் லக்ஷ்மணன், நிர்வாக அறங்காவலர் பி.பி.ஜெயின், நிர்வாக இயக்குநர் வி.சங்கர் பங்கேற்றனர். சங்கரா குழுமம் வளர்ச்சிக்கு உதவிய அனைவரையும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கவுரவித்தார். தொடர்ந்து பவள விழா மலரை வெளியிட்டு அவர் பேசியதாவது:
70-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகளில், ஈடுபட்டு வரும் சங்கரா குழும நிர்வாகிகள், நன் கொடையாளர்கள், ஊழியர் களுக்கு மரியாதை செய்தது, பெருமை அளிக்கிறது.
42 கோடி ரூபாய் செலவில், ஓடிசா மாநிலத்தில் சங்கரா மருத்துவமனை தொடங்கப்பட் டுள்ளது. விரைவில், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் கிளைகள் தொடங்க உள்ளன.
நம் நாட்டில், சேவை மனப்பான்மை இயற்கையாகவே உள்ளது. தனியாக கட்டிடங்கள், மண்டபங்கள் கட்டி, சேவை செய்வது என்பதை, சங்கரா நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தமிழக மக்களின் மனதில், கருணை, ஈரம், பிறருக்கு உதவி செய்வது என்பது அந்தந்த குடும்பத்தின் மூதாதையர்களால், குழந்தைகளுக்கு கற்றுத் தரப் படுகிறது.
‘ஆலயம் தொழுவது, சாலமும் நன்று,’ எனச் சொன்ன பிரதேசம் நம் மாநிலம். இவ்வளவு உயர்ந்த தமிழகத்தில், தர்ம சிந்தனை சங்கரா குழுமம் போன்ற, பல குழுமங்களால் வளர்ந்து வருகின்றன.
அனைவரும் சேர்ந்து, சேவை செய்ய வேண்டும். உணவு, அறிவு அளித்தல், நல்ல உணர்வுகளை உருவாக்குதல் உட்பட பல நல்ல சிந்தனைகளோடு, கல்விச் சேவை நடந்து வருகிறது. இக்கல்விச் சேவைக்கான இடங்களாக, பல கிராமங்களில், கோயில் நிலங்கள் இயங்கி வருகின்றன.
சமுதாயத்தின் வளர்ச்சியில், சமயத்தின் பங்கு அதிகம் உள்ளது. சமயத்தின் வளர்ச்சி, நம் பக்தியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். சமுதாயமும் சமயத்தின் வளர்ச்சியில் பங்கு வகிக்க வேண்டும். அதேபோல், சமுதாய மக்களும் சமுதாயம் மற்றும் பக்தியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். சேவை செய்யும் மனப்பான்மையை, மக்களுக்கு வளர்க்க வேண்டும். தர்ம சிந்தனை, சேவை மனப்பான்மை வளர்க்கப்படுவது, கிராம மற்றும் நகர இணைப்புகளுக்கு பாலமாக அமையும்.
சென்னையில் உள்ள மக்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல் பட்டு மாவட்டங்களில் உள்ள, கிராம கோயில்களுக்கு வாரம் ஒரு முறையாவது செல்ல வேண்டும். அப்போதுதான், அங்குள்ள மக்க ளின் வருவாயும் பெருகும்.
இவ்வாறு அவர் பேசினார்.