அலுவலகங்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்த ஆய்வுக்காக பொங்கல் விடுமுறை நாட்களில் வரும் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு: மத்திய அரசு அலுவலர்கள் வேதனை

அலுவலகங்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்த ஆய்வுக்காக பொங்கல் விடுமுறை நாட்களில் வரும் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு: மத்திய அரசு அலுவலர்கள் வேதனை
Updated on
2 min read

சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு ஆய்வு செய்ய உள்ளதால், அந்த அலுவலகங்களில் பணிபுரி யும் அலுவலர்கள் வேதனைக் குள்ளாகியுள்ளனர்.

மத்திய அரசின் அலுவல் மொழி யாக இந்தியை ஏற்கும் விதமாக 1963-ம் ஆண்டு ஆட்சிமொழி சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுதுறை நிறுவனங்களில் இந்தி மொழி பயன்படுத்தப் படுவதன் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய, 1976-ம் ஆண்டு நாடாளு மன்ற ஆட்சிமொழிக் குழு அமைக்கப்பட்டது. இந்த இக்குழு வின் தலைவராக மத்திய உள் துறை அமைச்சர் இருப்பார். 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள், குழுவின் உறுப்பினர்களாக இருப்பர்.

மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக இந்தி பயன்படுத்தப்படுவதை நேரடியாக ஆய்வு செய்து, அது தொடர்பாக குழுவின் தலைவருக்கு அறிக்கை அளிப்பது மற்றும் பரிந்துரைகளை வழங்குவது இக்குழுவின் முக்கிய நோக்கமாகும்.

இக்குழுவின் 10 உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் சென்னை யில் உள்ள மத்திய அரசு அலு வலகங்களில் இந்தி மொழி பயன் படுத்தப்படுவதன் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய இன்று (திங்கள் கிழமை) வருகின்றனர். அவர்கள், பொங்கல் விழா நாட்களான ஜனவரி 14, 15, 16 ஆகிய நாட் களில் தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளனர். பொங்கல் விழா கொண் டாடப்படும் நாட்களில் வருவதால், சுமார் 16 மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழர்களின் முக்கிய பண்டிகை யாக பொங்கல் விழா உள்ளது. இயற்கையோடு இணைந்த, மதங்க ளைக் கடந்த விழாவாகவும் விவசாயிகளைப் போற்றும் திரு விழாவாகவும் இது பார்க்கப் படுகிறது. இக்குழு வருகையால், பொங்கல் திருவிழாவை குடும்பத் துடன் கொண்டாட முடியாத நிலை சென்னையில் உள்ள பெரும் பாலான மத்திய அரசு அலுவலக அலுவலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்குழுவிடம் தெரிவித்தும் நிர்ணயிக்கப்பட்ட நாளில் ஆய்வு நடத்துவதில் அக்குழு உறுதியாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் உள்ள சாஸ்திரி பவன், சென்னை துறைமுகம் போன்ற பல மத்திய அரசு அலுவல கங்களில் பல்வேறு வசதிகள் கொண்ட தங்கும் விடுதிகள் உள் ளன. ஆனால் இக்குழு உறுப் பினர்கள் மற்றும் உடன் வரு வோருக்கு கிண்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்ய அறிவுறுத்தப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவர்களுக்கு தலா சுமார் ரூ.2 ஆயிரம் மதிப்பில் வெள் ளித் தட்டு நினைவுப் பரிசாகவும் சுமார் ரூ.1000 மதிப்பில் பை ஒன்றும், ஆய்வுக்கு உள்ளாக்கப்படும் துறைகள் ஒவ்வொன்றும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பல மத்திய அரசு துறைகளில் கடைநிலை ஊழியர்களுக்கு ஊதி யம் வழங்க முடியாத அளவுக்கு நிதிநிலை இருக்கும்போது இது போன்ற செலவுகளை எதில் கணக்கு காட்டுவது என தெரியா மல் அதிகாரிகள் விழிபிதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இக்குழுவினரை சென்னையில் பல்வேறு இடங்களில் சுற்றிக் காட்டும் செலவையும் ஏற்க வேண்டுமாம். குறிப்பாக சீன அதிபர், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த மாமல்லபுரத்தை கட்டா யம் பார்க்க உள்ளார்களாம். இதுபோன்ற இன்னபிற செலவுகளை சமாளிப்பதற்காக, தன்னாட்சி அமைப்புகளான (3-ம் நபர் கணக்கு தணிக்கை செய்யாதவை) தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் (NIOT), இந்திய விமான நிலையங்கள் ஆணையரகம் ஆகியவை ஆய்வு செய்யப்படும் துறைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமான நிலையங்கள் ஆணையரகம் தான் ஒருங்கிணைப்பு துறையாக செயல்படுகிறது.

ஒவ்வொரு உறுப்பினருக்கும், 3 நாட்களுக்கு உடன் இருந்து அவர்களுக்கான உதவிகளை செய்ய தலா 4 பேர் மற்றும் துறை வாகனங்களை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

கஜா புயலின்போது டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் சேதங்களை சந்தித்தன. அதை பார்க்க நாடாளுமன்ற எம்பிக்கள் குழு யாரும் வரவில்லை. அதைவிட, துறைகளில் இந்தி மொழி பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. அக்குழு ஆய்வு செய்வது பற்றியும் அதற்கு ஆகும் செலவு கூட கவலை இல்லை. பொங்கல் விழாவின்போது இந்த ஆய்வை நடத்துவது தான் வேதனை அளிக்கிறது. அதை அக்குழு தவிர்க்கலாம் என்பது சென்னையில் உள்ள ஒட்டுமொத்த மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகை யான பொங்கல் பண்டிகையை மக்கள் குடும்பத்தினர் ஒன் றிணைந்து கொண்டாவது வழக்கம். இந்நிலையில், ஜனவரி 16-ம் தேதி பொங்கல் விடுமுறை தினத் தன்று, பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதால், பிரதமர் மோடியின் உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண் டும் என அண்மையில் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே பின்னர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in