

புதுச்சேரியில் குப்பைத் தொட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி காயம் அடைந்தார்.
புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை காட்டாமணி குப்பம், பெருமாள் நாயுடு வீதி சந்திப்பில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி ஒருவர் அங்கு இருந்த குப்பை தொட்டியில் பேப்பர் எடுத்து கொண்டிருந்தார். அப்போது குப்பை தொட்டியில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நாட்டு குண்டு வெடிப்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரியும் மணிகண்டன் நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார்.