Published : 12 Jan 2020 02:20 PM
Last Updated : 12 Jan 2020 02:20 PM

மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது; எடப்பாடி அரசின் நிதானமிழந்த போக்கு: ஸ்டாலின் விமர்சனம்

மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதற்கு தமிழக அரசுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டிடிவி தினகரன் கண்டன அறிக்கை வெளியிட தற்போது மு.க.ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில் இதனைக் கண்டித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்களால் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில் உரிய அனுமதி பெற்று அதற்கான கட்டணமும் செலுத்தி மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பின் சார்பில் வைக்கப்பட்ட புத்தக விற்பனை மையத்தில் எடப்பாடி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததாகச் சொல்லி அனுமதியை ரத்து செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மேலும், இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டு இருப்பது எடப்பாடி அரசின் நிதானம் இழந்த போக்கையே காட்டுகிறது. கைது செய்யப்பட்ட அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, மறுக்கப்பட்ட விற்பனை உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும், என்று பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x