

திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையரிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது.
27 மாவட்ட ஊராட்சித் தலைவர் கள், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் களைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடை பெற்றது. முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமியிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:
மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக தமிழகம் முழுவதும் முறைகேடுகளை அரங்கேற்றி உள்ளது.
சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் நடத்தப்பட வில்லை. அதுபோல தேனி மாவட்டம் கடைமலைக்குண்டு, பெரியகுளம், கடலூர் மாவட்டம் நல்லூர், சேலம் மாவட்டம் தாரமங்கலம், திண்டுக்கல், திரு வண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. பல இடங்க ளில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பிறகு நிறுத்தப் பட்டுள்ளன.
தேர்தலை நிறுத்தும் அதிகாரம்
தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு தேர்தல் ஆணையர் அல்லது நீதிமன்றம் தான் நிறுத்த முடியும். ஆனால், தேர்தல் நடத்தும் அலுவலர்களே பல இடங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தலை நிறுத்தி உள்ளனர். இது கடும் கண்டனத் துக்கு உரியது.
இதுதொடர்பாக மாநில தேர் தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தோம். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு டி.ஆர்.பாலு கூறி னார்.