

கூட்டணி கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாஜக கவுன்சிலர்களுக்கு ஊராட்சி ஒன்றி யத் தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளை அதிமுக வழங்கி உள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 4 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக இரண்டு இடங் களையும், கூட்டணிக் கட்சியான பாஜக ஒரு இடத்தையும் கைப் பற்றின. மீதி உள்ள ஒரு வார்டில் திமுக வெற்றி பெற்றது.
இந்நிலையில் கூட்டணிக் கட்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பாஜக பெண் கவுன்சிலர் பழனிமணியை கம்பம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு அதிமுக களம் இறக்கியது. அவர் போட்டியின்றி தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.
ஒரே பாஜக உறுப்பினர்
இதேபோல் தேனி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்த லில் பாஜக வேட்பாளர் ராஜபாண்டி யன் போட்டியின்றி வெற்றி பெற் றார்.
இந்த மாவட்ட ஊராட்சியில் அதிமுக 7 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்து டன் உள்ளது. பாஜக, ஒரே ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.