

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யில் ஊராட்சி ஒன்றியத் தலைவருக் கான தேர்தலின்போது வன்முறைக் கும்பல் அலுவலகத்தை சூறையாடி யது. இதைத் தடுக்க முயன்ற டிஎஸ்பி அரிவாளால் வெட்டப்பட் டார். இதைத் தொடர்ந்து நரிக்குடி ஒன்றிய தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இவற்றில், திமுக 5, திமுக 6, சுயேச்சைகள் 2, அமமுக 1 வார்டு களில் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றி யத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற் கான மறைமுகத் தேர்தல் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் வெங்கடேஷ் வரன் தலைமையில் தொடங்கியது.
ஒன்றியத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் பஞ்சவர்ணம், திமுக சார்பில் காளீஸ்வரி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வாக்கெடுப்பின்போது அதிமுக, திமுக தலா 7 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தன. இதை யடுத்து இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அரிவாள், கத்தி யுடன் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்துக்குள் மர்ம நபர்கள் சிலர் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி ெவங்டேசனின் வலது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கணினிகள், மேஜை, நாற்காலி களை அடித்து சூறையாடினர். அலுவலகம் மீது கல்வீசித் தாக்கி னர். அதையடுத்து, அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பி னர்களைக் கூட்ட அரங்கில் வைத் துப் போலீஸார் பூட்டி பாதுகாப்பு அளித்தனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
வெட்டுபட்ட கையில் துணியை கட்டியபடி, தனது கைத்துப்பாக்கி யுடன் சென்று கலவரக்காரர்களை டி.எஸ்.பி. வெங்கடேசன் விரட்டி னார். கலவரம் காரணமாக நரிக் குடியில் ஊராட்சி ஒன்றியத் தலை வர் தேர்தல் நேற்று ரத்து செய் யப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.
வத்திராயிருப்பு
இதேபோன்று வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 13 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 6, திமுக 6, சுயேச்சை 1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. இதில் சுயேச்சை வேட்பாளர் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார்.
ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. அப்போது அதிமுக, திமுகவினர் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தேர்தல் அலுவ லர் வர்கீஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி அதிமுக வினர் ரகளையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வினரும் வாக்குவாதம் செய்தனர்.
இதையறிந்த சிலர் ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்து ஜன் னல் கண்ணாடிகள், மேஜை, நாற் காலிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். பதற்றமான சூழல் ஏற்பட்டதால் தேர்தல் தள்ளிவைக் கப்படுவதாக தேர்தல் அலுவலர் வர்கீஸ் தெரிவித்தார்.
சாத்தூர், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதை கண்டித்து ராஜபாளையத்தில் திமுக வார்டு உறுப்பினர்கள் 15 பேர் மறியல் செய்தனர். அப்போது தனுஷ்குமார் எம்பி, தங்கப்பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர் தேர்தல் நடத்துமாறு தேர்தல் அலுவலரிடம் வலியுறுத்தி னர். இதற்கிடையே, தேர்தல் அலுவ லர் செல்வராஜ் நெஞ்சுவலி காரண மாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் சென்றார்.