

தமிழகத்தில் அனுமதி இல்லாமல் இயங்கும் குடிநீர் உற்பத்தி ஆலை களை மூட வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவமுத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் நிலத்தடி நீரைப் பாதுகாக்க அரசு 1987-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த அனுமதி யும் இல்லாமல் பலரும் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். இந்த 3 மாவட்டங்களில் சுமார் 420 குடிநீர் உற்பத்தி ஆலைகள் சட்டவிரோத மாக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இந்த ஆலைகளை மூட நட வடிக்கை எடுக்க அரசுக்கு உத்தர விட வேண்டும்’ என்று கோரியிருந் தார்.
நீர்மட்டம் குறைகிறது
நீதிபதிகள் வினீத் கோத் தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகி யோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போகிறது. எனவே, அரசு அனு மதி இல்லாமல் இயங்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமி ழக பொதுப்பணித்துறை மற்றும் சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆலைகள் இனிமேல் அனுமதி பெற்றாலும், உயர் நீதி மன்ற அனுமதியில்லாமல், இயங்க அனுமதிக்கக் கூடாது.
இந்த உத்தரவை அமல்படுத் தியது குறித்து விரிவான அறிக் கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன், தமிழகத்தில் எத்தனை குடிநீர் உற்பத்தி ஆலை கள் இயங்குகின்றன, அதில் எத் தனை ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்ற விவ ரங்களுடன், பொதுப்பணித்துறை யின் நிலம் மற்றும் நிலத்தடி நீர் வளம் புள்ளி விவர மையத்தின் தலைமைப் பொறியாளர் வரும் பிப்ரவரி 6-ம்தேதி நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.