

வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இன்று (ஜன.12) முதல் ஜனவரி 14-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை பெரு நகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு:
பொங்கல் பண்டிகையை முன் னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று (ஜன.12) முதல் ஜனவரி 14-ம் தேதி வரை 3 நாட்கள் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டு பின் நகருக்குள் அனுப்பப்பட உள்ளன. அதன்படி அரசு பேருந்துகள் வண்டலூர் மேம் பாலம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டு பின் கோயம்பேடு பணிமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படும். ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக ஊரப் பாக்கம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லலாம். ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் மற்றும் 100 அடி சாலையில் வடபழனி நோக்கி செல்லக்கூடாது.
2 மணி வரை தடை
இதுதவிர சரக்கு வாகனங்கள் மதியம் 2 முதல் நள்ளிரவு 2 மணி வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மார்க்கங்களில் சென்னை வர தடை செய்யப்பட்டுள்ளது. செங் கல்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்கள் வண்டலூர் பாலம் வழியாக மாதவரம் ரவுண்டானா அடைந்தும், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் வெளிவட்ட சாலை வழியாக சென்னை செல்லவும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
100 அடி சாலையில்..
வடபழனி நோக்கிச் செல்லும் தனியார் வாகனங்கள் என்எஸ்கே நகர் சந்திப்பு, எம்எம்டிஏ காலனி, விநாயகபுரம் வழியாக செல்ல வேண்டும். பண்டிகை காலங்களில் பொதுவாகவே தாம்பரம் - பெருங் களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே, கார்கள் மூலம் தென்மாவட் டங்களுக்கு செல்பவர்கள் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலை வழியாக செங்கல்பட்டு சென்று ஊருக்கு செல்ல அறிவுறுத்தப்படு கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சரக்கு வாகனங்கள் மதியம் 2 முதல் நள்ளிரவு 2 மணி வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மார்க்கங்களில் சென்னைக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது.