மாடுபிடி வீரர்கள் வயது வரம்பில் மாற்றம்: பலத்த எதிர்ப்பால் 21-ல் இருந்து 18 ஆக குறைப்பு

மாடுபிடி வீரர்கள் வயது வரம்பில் மாற்றம்: பலத்த எதிர்ப்பால் 21-ல் இருந்து 18 ஆக குறைப்பு
Updated on
1 min read

ஜல்லிக்கட்டில் பங்கேற்க 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு அனுமதி இல்லை என்று மதுரை மாவட்ட நிர்வாகம், இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறையை அமல்படுத்தி இருந்த நிலையில், தற்போது 18 வயதில் இருந்தே வீரர்களை அனுமதிக்கலாம் என்று வயது வரம்பை தளர்த்தி உள்ளனர்.

மதுரை மாவட்டம் அவனியா புரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கடந்த ஆண்டு 18 வயதில் இருந்தே மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மாடு பிடிக்க அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது. இதற்கு ஜல்லிக்கட்டு வீரர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு அமைப்பினர், ஆர்வலர்கள், தமிழக அரசிடம் முறையிட்டுள் ளதாக கூறப்படுகிறது.

அனுமதி சீட்டு

இதையடுத்து, பாலமேட்டில் நேற்று நடந்த மாடுபிடி வீரர் களுக்கான உடல் தகுதித் தேர்வில் திடீரென்று 18 வயது ஆனவர்களுக்கும் போட்டிகளில் பங்கேற்ற மருத்துவத் துறையினர் அனுமதிச் சீட்டு வழங்கினர்.

இதுகுறித்து மருத்துவத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சனிக்கிழமை அன்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து 18 வயதில் இருந்தே வீரர்களை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனு மதிக்கலாம் என வயது வரம்பை திருத்தி உடல்தகுதித் தேர்வு நடத்த அறிவுறுத்தினர்.

உடல்தகுதித் தேர்வு

அதன் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத னால் அலங்காநல்லூரில் 18 வய தில் இருந்து 21 வயது வரை உள்ளவர்களை தேர்வு செய்ய, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும் மற்றொரு நாளில் உடல்தகுதித் தேர்வு நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவட்ட நிர்வாக உயர் அதி காரி ஒருவர் கூறும்போது ‘‘கடந்த காலத்தில் ஜல்லிக்கட்டில் காய மடைந்தோர் பட்டியலை ஆய்வு செய்ததில் 18 வயதில் இருந்து 21 வயது வரையுள்ளவர்களே அதிக மாக இருந்தனர். இந்த வயதில் ஆர்வமிகுதியில் கட்டுப் பாடில்லாமல் மாடுகளை அடக்க முயற்சிப்பதால் அவர்கள் காய மடைய நேரிடுவதாக மருத்துவத் துறையினர் கூறினர்.

அதன் அடிப்படையில்தான் 21 வயதுக்கு குறைவானவர்களை அனுமதிக்க மறுத்தோம்’’ என்றார்.ஆர்வமிகுதியில் கட்டுப் பாடில்லாமல் மாடுகளை அடக்க முயற்சிப்பதால் மாடுபிடி வீரர்கள் காயமடைய நேரிடுவதாக மருத்துவத் துறையினர் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in