சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏவின் தம்பி ஒன்றியக் குழு தலைவராகத் தேர்வு

இ.ஏ.கார்த்திகேயன்
இ.ஏ.கார்த்திகேயன்
Updated on
1 min read

மணமேல்குடி ஒன்றியக் குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த இ.ஏ.கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, மறைமுகத் தேர்தல் முழுவதும் ஆடியோ இல்லாத வீடியோவாக பதிவு செய்யவும் மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 15 ஒன்றிய உறுப்பினர் இடங்களில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றிருந்தது.

இதையடுத்து இன்று நடைபெற்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதியின் தம்பியும் திமுகவைச் சேர்ந்தவருமான இ.ஏ.கார்த்திகேயன் ஒன்றியக் குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமமுகவில் இருந்து விலகி சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் கார்த்திகேயன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in