

திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த கோ.பாலசுப்ரமணியன் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, மறைமுகத் தேர்தல் முழுவதும் ஆடியோ இல்லாத வீடியோவாக பதிவு செய்யவும் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 18 வார்டுகளில், 17 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திமுக கூட்டணி 14 இடங்களிலும் அதிமுக மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், 13-வது வார்டில் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு என்கின்ற கோ.பாலசுப்ரமணியன் மாவட்ட ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
ஒரு வார்டுக்கு தேர்தல் நடக்கும் முன்னர். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மறைவு காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.