

குரூப்-2-ஏ பணிகளுக்கான (நேர்காணல் அல்லாதது) 2-வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பி எஸ்சி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குரூப்-2-ஏ-வில் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத பணி களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 29.6.2014 அன்று நடத்தப்பட்டு டிசம்பர் 12-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலை யில், 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்ப தாரர்களின் தரவரிசை அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (>www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய் வுக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி, நேரம் அடங்கிய அழைப்புக்கடிதம் விரைவு தபால் மூலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மதிப் பெண், தரவரிசை, இடஒதுக் கீடு அடிப்படையில் காலிப்பணி யிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப் படுவர். எனவே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணிநியமனம் வழங்கப்படும் என்று உறுதியாக கூற முடியாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தவறுவோருக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.