

கர்நாடக மாநிலம் ஹூப் ளியை சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக புதுச்சேரியைச் சேர்ந்த பாஜகபிரமுகரை கர்நாடக போலீ ஸார் நேற்று கைது செய்து அழைத்துச் சென்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராக் பெடரிக் (28). புதுச்சேரி பாஜக இளைஞரணி செயலாளராக உள்ளார். இவருக்கும் கர்நாடக மாநிலம் ஹூப்ளியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நட்பு இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். இதனிடையே இளம்பெண்ணுடன் இருந்த புகைப்படம், வீடியோவை சமூக வலை தளங்களில் ராக் பெடரிக் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஹூப்ளி காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்ததின் பேரில் கர்நாடக மாநில போலீ ஸார், ராக் பெடரிக் மீது வழக் குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று புதுச் சேரி வந்த கர்நாடக மாநில போலீஸார், வடக்கு பகுதி எஸ்பி சுபம்கோஷ் உதவியுடன் லாஸ்பேட்டை பகுதியில் இருந்த ராக் பெடரிக்கை கைது செய்தனர். பின்பு தனி காரில் ராக்கை ஹூப்ளிக்கு அழைத்துச் சென்றனர்.