அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 740 மாடுபிடி வீரர்கள் தேர்வு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க உடல் தகுதித் தேர்வுக்காக அறையில் காத்திருந்த இளைஞர்கள்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க உடல் தகுதித் தேர்வுக்காக அறையில் காத்திருந்த இளைஞர்கள்.
Updated on
1 min read

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக் கான உடல் தகுதித் தேர்வு நேற்று நடந்தது. இதில், பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே அலங்காநல்லூரில் திரண்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பார்வையாளர்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த போட்டியை காண வருவார்கள்.

தமிழக அரசும், அலங்காநல்லூர் ஊர் மக்களும் இணைந்து நடத்தும் இந்த ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் சிறந்த வீரர், சிறந்த காளைக்கு கார் பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு சுற்றிலும், வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் காளைகளை அடக்கு
வோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி,வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் ஏற்கெனவே காளைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதுவரை 700 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான உடல் தகுதித் தேர்வுநேற்று காலை அலங்காநல்லூரில் நடந்தது. இதில் பங்கேற்கநேற்று முன்தினம் இரவில்இருந்தே மதுரை மட்டுமின்றிதமிழகத்தின் பிற மாவட்டங்களில்இருந்தும் இளைஞர்கள் குவிந்தனர். அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர்.

இளைஞர்களை மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். உடல்தகுதியுடையோர், ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க பரிந்துரை செய்யப்பட்டனர். 740 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரியா கூறும்போது, வீரர்களின்உயரம், எடை, வயது மற்றும்உடல் நலம் குறித்து பரிசோதனைசெய்யப்பட்டது. நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் நிராகரிக்கப்பட்டனர் என்றார்.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவே அலங்காநல்லூரில் உடல் தகுதித் தேர்வுக்கு வந்தவர்களை போலீஸார் அலைக்கழித்ததாக இளைஞர்கள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாடுபிடி வீரர் ஜீவா கூறும்போது, ‘‘ உடல்தகுதித் தேர்வுக்கு நள்ளிரவே வந்துவிட்டோம். எங்களை போலீ
ஸார், அங்கும், இங்குமாக விரட்டியடித்தனர். உடல் தகுதித் தேர்வை நடத்த நீண்ட நேரமான தால் அறைகளில் அடைத்து காத்திருக்க வைத்தனர். குடிக்க தண்ணீர், சாப்பாடு இல்லாமல் சிரமப்பட்டோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in