சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு
Updated on
1 min read

சென்னை பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தால் கடந்த மே, ஜூன் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி(ஐடி), எம்எல்ஐஎஸ், பிஎல்ஐஎஸ், பட்டய, சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 28) இரவு 8 மணியளவில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in மற்றும் http://results.unom.ac.in என்ற இணையதளங்களில் காணலாம். விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டுக்கு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8 வரை பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in