

ஊழல், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சியினரை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழுக் கூட் டம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் அ.பாஸ்கர் தலைமை யில் திருவாரூரில் நேற்றுமுன் தினம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கோ.பழனிசாமி, வை.சிவபுண்ணியம், திருத்துறைப் பூண்டி எம்எல்ஏ கே.உலகநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஞானமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், கட்சியின் மாநிலச் செய லாளர் ரா.முத்தரசன் பேசியது: பெரிய ஊழல்களில் ஈடுபட்டதால் காங்கிரஸ் கட்சியை மக்கள் தனிமைப்படுத்தினர். அப்போது, காங்கிரஸுக்கு மாற்றாக மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளைத்தான் ஆதரித்திருக்க வேண்டும். ஆனால், பாஜகவை ஆதரித்தனர்.
காங்கிரஸ் கட்சியைப் போன்றே பாஜகவும் பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ளது தற் போது அம்பலமாகி வருகி றது. பாஜக ஆளும் 8 மாநிலங் களின் முதல்வர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி யுள்ளனர். தேடப்படும் குற்ற வாளியான லலித் மோடிக்கு பாஜக மத்திய அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா உள்ளிட்டோர் உதவி செய்துள் ளனர். வகுப்புவாத, மதவாத சக்திகளுக்கு மாற்று கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்.
தமிழகத்தில் மதுக் கடை களுக்கு எதிரானப் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரு கிறது. மத்திய அரசு பெரும் முதலாளிக்கு ஆதரவாகச் செயல் படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், சலுகைகள் மறுக் கப்படுகின்றன. ஏழை, எளிய மக் களுக்கான மானியம் குறைக் கப்படுகிறது. இவற்றை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடு வோம்.
அதிமுக, திமுக 2 கட்சி களும் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளன, இந்தக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் கூட்டியக்கத்தின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தொடர்ந்து போராடும் என்றார்.