Published : 10 Jan 2020 07:41 AM
Last Updated : 10 Jan 2020 07:41 AM

நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

நாடாளுமன்றம், சட்டப்பேரவை யில் ஆதிதிராவிடர், பழங்குடி யினருக்கான இடஒதுக்கீடு தொடர் பான அரசியலமைப்பு சட்டத்திருத் தம் தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பின் 368-வது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த திருத்தங் களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான தீர்மானம் நேற்று சட்டப்பேரவையில் தனி தீர் மானமாக கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன் மொழிந்தார்.

இதன் மீது எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியது:

சட்டப்பேரவையில், நாடாளு மன்றத்தில் தாழ்த்தப்பட்ட, பழங் குடியினர், ஆங்கிலோ இந்தி யன் பிரதிநிதி அமர்வதற்கு அரசிய லமைப்புச் சட்டம் அங்கீகாரம் அளித்துள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுக்ளுக்கும் ஒருமுறை இந்த வாய்ப்பு வழங்கி வருகின்றனர். அந்த அடிப்படையில் நாடாளு மன்றத்தில் எந்த எதிர்ப்பும் இல் லாமல், மீண்டும் 10 ஆண்டுகளுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஒதுக்கீடு வழங்கி சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால், ஆங்கிலோ இந்தியன் களுக்கு இனி பிரதிநிதித்துவம் தரத்தேவையில்லை என்று இந்த சட்டத்தில் உள்ளது. அதில் நாங்கள் மாறுபடுகிறோம். ஆங்கிலோ இந் தியன் பிரதிநிதித்துவத்தை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

காங்கிரஸ் கொறடா எஸ்.விஜய தரணி பேசும்போது, ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆதி திராவிட, பழங்குடியின மக் களுக்கு சட்டப்பேரவையில் பிரதி நிதித்துவம் தொடர்பாக 2030-ம் ஆண்டு வரை கால நீட்டிப்பு செய் துள்ளனர். ஓரளவுக்கு ஆதிதிரா விட மக்கள் முன்னேற்றமடைந் துள்ளனர்.

அதனால்தான் சட்டப் பேரவை தலைவர் போன்றவர்கள் வழிநடத்தும் இடத்தில் உள்ளனர். ஆனால், பழங்குடியின மக்களிடம் வளர்ச்சி இல்லை. ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கு 70 ஆண்டு களாக தரப்பட்ட நியமன இடம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்பு தல் அளிக்கக் கூடாது’’ என்றார்.

இதே கருத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கரும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவையில் நியமன உறுப்பினராக உள்ள ஆங்கிலோ இந்தியன் பிரி வைச் சேர்ந்த நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் பேசும்போது, ‘‘ஆங் கிலோ இந்தியன் பிரிவினர் மொழி வாரியாகவும் இன வாரியாகவும் எண்ணிக்கையிலும் மிகவும் சிறு பான்மையினராக உள்ளோம். 70 ஆண்டுகளாக எங்களுக்கு அளிக் கப்பட்ட பிரதிநிதித்துவம் மறுக்கப் பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.

கல்வி உள்ளிட்ட பல்வேறு துறை களிலும் எங்கள் பங்களிப்பு உள் ளது. இந்த அரசு ஆங்கிலோ இந்திய பிரதிநிதித்துவத்தை தொடர்ந்து வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதை எனது கோரிக்கையாகவும் வைக்கிறேன்’’ என்றார்.

அதன்பின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:

அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மீது வைத்திருந்த பற்றுதலை அவர்கள் மேற்கொண்ட திட்டங்கள் மூலம் மக்கள் அறிவார்கள்.

சட்டப்பேரவைத் தலைவரை தொடர்ந்து 2-வது முறையாகவும் கொண்டுவந்தார். ஆதிதிராவிட, பழங்குடியின மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன. இந்த அரசு எந்த நிலையிலும் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கும் சிறு பான்மையின மக்களுக்கும் அரணாக செயல்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆங்கிலோ இந்திய பிரதி நிதித்துவம் தொடர வேண்டும் என்பது தொடர்பான அதிமுக நிலைப்பாட்டையும் மாநிலங் களவையில் விவாதத்தின் போது சமாஜ்வாடி, திமுக உள்ளிட்ட கட்சி களுடன் இணைந்து தெரிவித் தோம். மத்திய அமைச்சரும் பரி சீலிப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x